About Us

பலாலி என்னும் பெருமை ஊர் யாழில் இருந்து வடக்கே பதினைந்து கிலோமீட்டர்களுக்கு அப்பால் கடற்கரையுடன் அமைந்த அழகிய கிராமம் ஆகும் .இவ்வூரை பலாலி கிழக்கு, பலாலி மேற்கு, பலாலி மத்தி, பலாலி வடக்கு, பலாலி தெற்கு என அழைப்பர். யாழ்ப்பாணத்துடன் எமதூரை இணைக்கும் வீதிக்குபெயர் பலாலி வீதி ஆகும் .பலாலி மூன்று சந்திகளை கொண்ட ஊராகும். மேற்கே காங்கேசன்துறை வீதியையும் கிழகக்கே தொண்டைமானாறு வீதியையும் கொண்டதாகும்.. இவ்வீதிகள் கடற்கரையுடன் சேர்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. பலாலி தெற்கில் விமானநிலையச்சந்தி உள்ளது. இது நாற்சந்தி ஆகும். மேற்கே விமான நிலையத்தை நோக்கி ஒரு வீதியும் கிழக்கே வளலாய் நோக்கி ஒரு வீதியும் பலாலி வீதியை குறுக்கிடுகின்றன. எமதூர் அண்ணளவாக பதினைந்து சதுரகிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும். மேற்கே மயிலிட்டி, கிழக்கே வளலாய், அச்சுவேலி, தெற்கே வசாவிளான் ஆகியவற்றை அயல் கிராமங்களாக கொண்டுள்ளன.
பெருமையான ஊர் பலாலி என்னும் கிராமம்

Palaly, Palaly community organisation, helping childrens, jaffna